ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு.. உயிரிழந்த குடும்பத்தினருக்கு நீதி வேண்டும் - உயர்நீதிமன்ற வழக்கறிஞர்ரஜினி

by Editor / 20-05-2026 05:26:29pm
ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு.. உயிரிழந்த குடும்பத்தினருக்கு நீதி வேண்டும் - உயர்நீதிமன்ற வழக்கறிஞர்ரஜினி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினர் சார்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரஜினி, 2018 மே 22 அன்று ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடியவர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர். ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் பரிந்துரைப்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். முதல்வர் ஜோசப் விஜய் இந்த விஷயத்தில் தலையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

 

Tags :

Share via

More stories

Logo