ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைக்குமா?.. இன்றுவிசாரணை
போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது.
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த சனிக்கிழமை போதை பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதை விருந்து நடப்பது உறுதி செய்யப்பட்டது..
புள்ளிகள், சினிமா நட்சத்திரங்களின் குழந்தைகள் ஆகியோரும் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர்... இதுகுறித்த தகவல் கிடைக்கவும், விரைந்து சென்ற போதை தடுப்பு பிரிவு போலீஸார் கப்பலில் தீவிர சோதனையை மேற்கொண்டனர். ஷாருக் கானின் மகன் இதில் சிக்கியுள்ளதால் இந்த விவகாரம் தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.அப்போது போதை பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்...
ஆவாட்ஸ்ஆப் சேட் அடிப்படையில் ஆர்யான் கான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகின்றன.எனவே, இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க வேண்டி உள்ளதால், ஆர்யான் கானை அக்டோபர் 13 வரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என போதைப்பொருள் தடுப்பு பிரிவு மும்பை கோர்ட் அனுமதி கோரியது...
இதையடுத்து, ஆர்யான் கானை அக்டோபர் 7-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது... பிறகு ஆர்யான் கான் உள்பட 8 பேரை மும்பை கோர்ட்டில் போலீசார் நேற்று ஆஜர்படுத்தினார்கள்.அப்போது ஆர்யான் கான் உள்ளிட்டோரை அக்டோபர் 11 வரை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று அனுமதி கோரியது.
ஆனால் இதற்கு அனுமதி மறுத்த கோர்ட் ஆர்யான் கான் உள்பட 8 பேரை 14 நாள் நீதிமன்ற காவலிலில் அனுப்பியது. இதனிடையே, ஆர்யான் கான், தன்னுடைய வழக்கறிஞர் சதீஷ் மனேஷிண்டே மூலம் ஜாமீன் கோரி விண்ணப்பித்துள்ளார்... கைதான 8 பேருமே தனித்தனியாக ஜாமீன் கோரி மனு அளித்துள்ளனர்..அந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நேற்றே நடக்கும் என்று எதிர்பாக்கப்பட்டது..
ஆனால் விசாரணை நடக்கவில்லை... எனவே, இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு வருகிறது... போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், ஆர்யான் கானுக்கு ஜாமீன் தந்துவிடக்கூடாது என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இன்றைய தினம் ஜாமீன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Tags :