பூத்துக் குலுங்கும் குங்கும பூக்கள்.

by Editor / 03-11-2021 11:25:48pm
பூத்துக் குலுங்கும் குங்கும பூக்கள்.

ஜம்மு காஷ்மீர் குங்கும பூக்கள் உலக அளவில் பிரசித்தி பெற்றவை. ஜம்மூ காஷ்மீரில் பொதுவாக புல்வாமா, புத்தம், ஸ்ரீநகர், கிஷ்வர் ஆகிய பகுதிகளில் குங்கும பூக்கள் சாகுபடி செய்யப்படும்.

இந்த பூக்கள் பொதுவாக இலையுதிர் காலத்தின் முடிவில் அதாவது அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பூத்து குலுங்கும்.

அதன்படி குங்கும பூக்களை  அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
 
கையில் கூடைகளுடன் விவசாயிகள் பூக்களை பறித்து வருகின்றனர்.

சரியான நேரத்தில் பெய்த மழை மற்றும் சாதகமான வானிலை காரணமாக இந்த ஆண்டு குங்கும பூக்கள் அமோக விளைச்சலை கண்டுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

 

Tags :

Share via