அண்ணா பல்கலையில் நிதி மோசடி
அண்ணா பல்கலையில் நிதி மோசடி
அண்ணா பல்கலைக்கழகப்பதிவாளருக்கு முதன்மை கணக்கு த்தணிக்கைஅலுவலகத்திலிருந்து கடிதம்
அனுப்பப்பட்டுள்ளது.அதில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இ.எம்.எம்.ஆர்.சி. இயககுனர் அலுவலகம்
தொடர்பான பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது இயக்குனராக எஸ்.கவுரி என்பவர் இருந்தார்.
அப்போதைய இயக்குனரால் வழங்கப்பட்ட சேவை காலத்தில்,முறையற்ற பதிவேடு பராமரிப்பு,நிதி முறைகேடு, விதிகளைமீறி நிதி பயன்படுத்தப்பட்டது.முறையற்ற நிதி பரிமாற்றம்,ரூ1கோடியே31லட்சத்துக்கு சுய காசோலை எடுக்கப்பட்டது போன்றவை கவனிக்கப்பட்டன.ரூ1கோடியே61லட்சம் மதிபிலான உபகரணங்கள் பல்கலைக்கழக துணைவேந்தரின் நிர்வாக மற்றும் நிதி அனுமதி பெறாமல்,வாங்கப்பட்டு இருக்கின்றன, மேலும்,முதலீடுகள்,மறு முதலீடுகள் பதிவாளரின் ஒப்புதல் பெறாமல் செய்யப்பட்டுள்ளன.இதனை தலைமை கணக்கு தணிக்கை அறிக்கையில் சேர்ப்பதற்காக பரிசீலித்து வருகிறோம்,இதற்கான பதிலை விரைவில் அளிக்க வேண்டும்,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :