புத்தாண்டு கொண்டாட்டம் கட்டுக்கட்டாக சிக்கிய 51 லட்ச லஞ்சப்பணம்

by Editor / 23-12-2021 03:48:22pm
புத்தாண்டு கொண்டாட்டம் கட்டுக்கட்டாக சிக்கிய 51 லட்ச லஞ்சப்பணம்

ஈரோட்டில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத 51 லட்ச ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூன்றாவது தளத்தில் மாவட்ட ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பணிபுரியக்கூடிய அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் திட்டப்பணிகள் குறித்து விண்ணப்பிக்கும் பொதுமக்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 

சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில், பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 51 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. 

கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

புத்தாண்டு கொண்டாட்டம் கட்டுக்கட்டாக சிக்கிய 51 லட்ச லஞ்சப்பணம்
 

Tags :

Share via

More stories