அரியலூரில் ரயில்பாதை சீரமைப்பு பணியால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

by Editor / 23-12-2021 06:34:44pm
அரியலூரில் ரயில்பாதை சீரமைப்பு பணியால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

திருச்சி கோட்டத்தில் உள்ள அரியலூர் ரயில் நிலையத்தில் டிசம்பர் 26 முதல் ஜனவரி 15 வரை ரயில் பாதை சீரமைப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் அந்தப் பகுதியில் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி சென்னையிலிருந்து டிசம்பர் 26 முதல் 29 வரை மற்றும் டிசம்பர் 31 முதல் ஜனவரி 10 வரை புறப்பட வேண்டிய வண்டி எண் 16127 சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயில் விருத்தாச்சலம் கார்ட் லயன் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர் மெயின் வழியாக இயக்கப்படும். அதேபோல பிகானீரில் இருந்து டிசம்பர் 26 மற்றும் ஜனவரி 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய வண்டி எண் 22632 பிகானீர் - மதுரை வாராந்திர அதிவிரைவு  ரயில் மற்றும் டிசம்பர் 25 ஜனவரி 1 மற்றும் 8 ஆகிய நாட்களில் அஜ்மீரிலிருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 20973 அஜ்மீர் - ராமேஸ்வரம் வாராந்திர அதிவிரைவு ரயில் ஆகியவையும் கும்பகோணம், தஞ்சாவூர் மெயின் லைன் வழியாக இயக்கப்படும். மதுரையிலிருந்து டிசம்பர் 30, 31 ஜனவரி 6 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய வண்டி எண் 12636 மதுரை - சென்னை எழும்பூர் வைகை அதிவிரைவு ரயில் மற்றும் குருவாயூரிலிருந்து ஜனவரி 9 அன்று புறப்பட வேண்டிய வண்டி எண் 16127 குருவாயூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் ஆகியவையும் தஞ்சாவூர், கும்பகோணம் மெயின் லைன் வழியாக இயக்கப்படும்.

ரயில்கள் பகுதியாக ரத்து

மதுரையிலிருந்து டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 6 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய வண்டி எண் 12636 மதுரை - சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில் தாம்பரம் - சென்னை எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை எழும்பூரிலிருந்து டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 6 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய வண்டி எண் 12605 சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் விரைவு ரயில் சென்னை எழும்பூர் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.

 

Tags :

Share via