கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில்  மத்திய அரசு தோல்வி சோனியா காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

by Editor / 10-05-2021 04:03:52pm
  கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில்  மத்திய அரசு தோல்வி சோனியா காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு



கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது எனவும், அறிவியல்பூர்வமான ஆலோசனைகளை மத்திய அரசு வேண்டுமென்றே நிராகரித்ததாகவும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது. காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த தோல்வி பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக தெரிவித்த சோனியா காந்தி, இந்த தோல்வி தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை அளிக்க குழு அமைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
குறிப்பாக கேரளா, அசாம் சட்டமன்ற தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆழமாக ஆராய வேண்டும் என தெரிவித்தார். மேலும் பேசிய சோனியா காந்தி, கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது எனவும், அறிவியல்பூர்வமான ஆலோசனைகளை மத்திய அரசு வேண்டுமென்றே நிராகரித்த தாகவும், அதன் கொடுமையான தாக்கத்தை தற்போது நாடு அனுபவித்து வருவதாகவும், நாட்டின் பொது சுகாதார அமைப்புகள் அனைத்தும் சீர்குலைந்துள்ள தாகவும், குற்றஞ்சாட்டினார்
.மோடி அரசு தனது கடமைகளையும், பொறுப்புகளை தட்டிக்கழித்து வருகிறது என்று கூறியுள்ள அவர், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மாற்றான் தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு நடத்தி வருவது வெட்கக்கேடானது என கண்டனம் தெரிவித்தார். கொரோனா தொடர்பாக விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்றும் இந்த கொடுமையான சூழலில் இந்தியாவுக்கு உதவிகரம் நீட்டிய உலக நாடுகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via