தென்காசி மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கடுமையான காட்டுத்தீ

by Editor / 14-03-2022 10:45:38pm
தென்காசி மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கடுமையான காட்டுத்தீ

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தற்போது மழை இல்லாத நிலை கடந்த இரண்டு மாதங்களாக நீடித்து வருகின்றது. மேலும் கோடை காலமும் தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து வனப்பகுதிகளில் வறட்சி நிலை நீடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தென்காசி மாவட்டம் வடகரை முதல் கடையநல்லூர் வரை உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கடுமையான காட்டுத்தீ  கடந்த 3நாட்களாக ஏற்பட்டு எரிந்துவருகிறது.இந்த தீயை அணைக்கும் பணியில் கடையநல்லூர்  வனச்சரக  குழுவினர் இரவு பகலாக போராடி வருகின்றனர். 
.வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் காரணமாக பல நூறு ஏக்கர் பரப்பளவிலுள்ள தேக்கு உள்ளிட்ட பல்வேறு அரிய வகை மரங்கள் மூலிகை பொருட்கள் உள்ளிட்ட தீயில் கருகி நாசமாயின. மேலும் ஊர்வன வகையைச் சார்ந்த விலங்கினங்களும் அங்கிருந்து இடம் இடம்பெயர்ந்துள்ளன. தொடர்ந்து பற்றியெரியும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் காட்டுத்தீயை வனவிலங்குகள் வேட்டைக்கு செல்லும் சமூக விரோதிகள் கும்பல் தீவைத்து இருக்கலாம் எனசந்தேகிக்கபடுகிறது.

 

Tags : Severe wildfire in the Western Ghats of Tenkasi District

Share via