விருதுநகரில் கல்லூரி பேருந்து சக்கரத்தின் அச்சு உடைந்து மரத்தில் மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கல்லூரி பேருந்து சக்கரத்தின் அச்சு உடைந்து மரத்தில் மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்தனர் எஸ் ஆர் நாயுடு ஞாபகார்த்த கல்லூரி பேருந்து சுமார் 60 மாணவிகளுடன் திருவேங்கடத்தில் இருந்து சாத்தூர் நோக்கி சென்று கொண்டு இருந்தது .மேட்டுப்பட்டி என்ற இடத்தில் திடீரென பேருந்தின் முன்பக்க சக்கரத்தின் அச்சு உடைந்ததாக கூறப்படுகிறது இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது இந்த விபத்தில் பேருந்தில் முன்பகுதி நெருங்கிய நிலையில் அதில் சிக்கி படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்ட மாணவிகள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த 6 மாணவிகள் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
Tags :



















