கொரோனாவுக்கு உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் நிபுணர்கள்

by Staff / 15-05-2022 05:43:51pm
கொரோனாவுக்கு உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் நிபுணர்கள்

வடகொரியாவில் கடந்த வியாழக்கிழமை முதல் முறையாக ஒருவருக்கு ஓமைக்ரான் உறுதிசெய்யப்பட்ட நிலையில் காய்ச்சல் பாதிப்புக்கு மேலும் 15 பேர் பலியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சலால் இதுவரை 42 பேர் பலியாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களில் 8 லட்சத்து 20 ஆயிரத்து 670 பேருக்கு காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்பட்டு இருப்பதாக வடகொரிய அரசு செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மாதம் முதல் பரவியதாக கூறியுள்ள வடகொரியா எத்தனை பேர் தோற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர் என்ற விவரங்களை வெளியிடவில்லை.

 

Tags :

Share via

More stories