பேரறிவாளனை விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு..? நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன் தன்னை விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவடைந்து தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. இந்த வழக்கில் பேரறிவாளன், தமிழக அரசு, மத்திய அரசு எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்திருந்தது. பேரறிவாளனை விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக வாதங்கள் நடைபெற்ற நிலையில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.நாளைய தீர்ப்பு அரசியல் பார்வையாளர்கள்,விமர்சகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Tags : Who has the power to release Perarivalan ..? Supreme Court verdict tomorrow