கொரோனாவால் இறக்கும் ஊழியர்கள் குடும்பத்திற்கு 60 வயது வரை சம்பளம்!

by Editor / 26-05-2021 09:50:58am
கொரோனாவால் இறக்கும் ஊழியர்கள் குடும்பத்திற்கு 60 வயது வரை சம்பளம்!

பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா, தனது டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் யாராவது, கொரோனா தொற்றால் உயிர் இழந்தால், அவரது குடும்பத்துக்கு அந்த ஊழியர்களின் 60 வயதை எட்டும் வரை சம்பளத்தை வழங்க உள்ளதாக அறிவித்து உள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

எந்த ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனமும் அறிவிக்காத திட்டத்தை, ரத்தன் டாடாவின் டாடா ஸ்டீல் முதன்முதலாக அறிவித்து, புதியதொரு தொடக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை பின்பற்றி மற்ற நிறுவனங்களுக்கும், தங்களது ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

'இதுதொடர்பாக 'டாடா ஸ்டீல் வெளியிட்டுள்ள டிவிட் செய்திக்குறிப்பில், இந்த பயங்கரமான தொற்றுநோய்களின் போது தனது அன்புக்குரிய ஊழியர்களின் சோகமான மறைவில் ஆழ்ந்த இழப்பு உணர்வுடன் ஒன்றாக நிற்கிறது. ஒரு அழகான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக மறைந்த எங்கள் ஊழியர்களின் குடும்பங்களுக்கு ஒரு கவுரவமான வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்த டாடா ஸ்டீலின் சிறந்த சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் தன் ஊழியர்கள் 60 வயதை எட்டும் வரை கடைசியாக அவர்களுக்கு வரையப்பட்ட சம்பளத்தை வழங்க உள்ளது, இதில் மருத்துவ சலுகைகளும் ,வீட்டு வசதிகளும் அடங்கும்.'

'மேலும், பெருந்தொற்றின் காரணமாக தங்கள் வேலையின் போது துரதிர்ஷ்டவசமான மரணத்தை சந்தித்த அனைத்து முன்கள ஊழியர்களுக்கும், தனது அன்புக்குரிய ஊழியர்களின் குழந்தைகளின் பட்டப் படிப்பு முடிக்கும் வரை அவர்களின் கல்விக்கான அனைத்து செலவுகளையும் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும்' என அறிவித்து உள்ளது

'டாடா நிறுவனம் எல்லா நேரங்களிலும் அதன் பங்குதாரர்களை ஆதரிக்கிறது. இந்த நேரமும் வேறுபட்டதல்ல. டாடா ஸ்டீல் குடும்பம் தன் அனைத்து மக்களுடனும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு உறுதியுடன் நிற்கிறது' என தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் எந்த ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும் இதுவரை தனது நிறுவன ஊழியர்களின் மீது அக்கறைக்கொண்டு, எந்தவொரு உதவி செய்யவும் முன்வராத நிலையில், ரத்தன் டாடாவின் டாடா ஸ்டீல் முதன்முதலாக ஒரு அவசியமான முன்னெடுப்பை முன்னெடுத்து இருக்கிறது. இதை பின்பற்றி மற்ற நிறுவனங்களுக்கும், தங்களது ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. டாட்டாவின் அறிவிப்பு அனைத்து தரப்பினரிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

காப்பரேட் நிறுவனங்கள், ஒவ்வொரு உதவிக்கும் அரசை எதிர்நோக்காமல், தங்கள் நிறுவன ஊழியர்களின் பாதுகாப்புக்கும், துரதிருஷ்டவசமாக உயிரிழக்கும் ஊழியர்களின் குடும்பத்துக்கும் உதவி செய்வதை முன்னெடுக்க

 

Tags :

Share via