பாமக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் பரபரக்கும் பாமக. 

by Editor / 16-05-2025 08:50:18am
பாமக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் பரபரக்கும் பாமக. 

விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று (மே 16) நடைபெற உள்ள மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ் முடிவு செய்து கூட்டப்பட்டுள்ளதால் அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த மாதம் பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை விடுவித்து செயல் தலைவர் பதவியை ராமதாஸ் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த கூட்டம் எதற்காக நடக்கிறது என்ற கேள்விகளோடு   நிர்வாகிகள் உள்ளனர்.

 

Tags : பாமக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் பரபரக்கும் பாமக. 

Share via