கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்த காவல்துறை

by Editor / 30-07-2022 04:39:09pm
கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்த காவல்துறை

 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்டு 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.மூக்கன்  என்பவரது  பெட்டிக்கடைக்கு சென்று ஐந்து நபர்களில் ஒருவர் பல பலக்கும் ஐநூறு ரூபாய் நோட்டை கொடுத்து சிகரெட் கேட்டுள்ளார். அது கள்ள நோட்டு  என்பதை அறிந்த கடைக்காரர் போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்த நிலையில் உடனடியாக அங்கு வந்த போலீசார் ஐந்து பேரையும் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கள்ள நோட்டு அச்சடிக்கும் கும்பல் என்பதும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கள்ள நோட்டு அச்சடித்த வந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து அச்சடிக்கப்பட்ட ஒரு லட்சத்து 37 ஆயிரம் ஐநூறு ரூபாய் நோட்டுகளையும் கள்ளநோட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ஸ்கேனர் பிரிண்டர் உள்ளிட்ட கருவிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via

More stories