ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு.

ஒகேனக்கல்லில் இன்று மாலை 5 மணி நிலவரப்படி 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் இங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைந்தும் காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்ப்பை கருத்தில் கொண்டு அருவியில் குளிக்கவும் பரிசல் இயக்கவும்,பயணிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.மழையின் காரணமாக தொடர்ந்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்தும் அதிகரித்து காணப்படுகிறது.
Tags : Increase in water flow to Okanagan to 50 thousand cubic feet.