ஒரே கிராமத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் மின்சாரம் தாக்கிய மருத்துவமனையில் அனுமதி

by Editor / 19-08-2022 01:25:15pm
ஒரே கிராமத்தை சேர்ந்த 4 சிறுவர்கள்  மின்சாரம் தாக்கிய மருத்துவமனையில் அனுமதி


திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற இல்லம் தேடி கல்வித்திட்ட வகுப்பிற்கு சென்ற ஒரே கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவாதிரை மங்கலம் பகுதியில் சங்கர் என்பவருக்கு சொந்தமான கீற்றுக் கொட்டகையில் கல்விக்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வகுப்பிற்கு சென்ற சந்துரு நிஸ்வாந்த் யஷ்வந்த் சுரேஷ்குமார் ஆகிய சிறுவர்கள் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து இருந்த கம்பி வேலியை தொட்டுள்ளனர். இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் கிராம மக்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

Tags :

Share via

More stories