ரயில் பாதையை பலப்படுத்தும் பணி - மதுரை - செங்கோட்டை ரயில் ஆறு நாட்களுக்கு ரத்து

by Editor / 03-09-2022 09:01:00pm
ரயில் பாதையை பலப்படுத்தும் பணி - மதுரை - செங்கோட்டை ரயில் ஆறு நாட்களுக்கு ரத்து

தென்னக ரயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு:ராஜபாளையம் - சங்கரன் கோவில் பிரிவில்  ரயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுவதால் மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - செங்கோட்டை (06663) மற்றும் செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை - மதுரை (06664) முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் ஆகியவை செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 10 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via