சிபிஐ அடையாள அட்டைகளை அள்ளி விதைத்த போலி அதிகாரி கைது

by Editor / 22-11-2022 08:53:18am
 சிபிஐ அடையாள அட்டைகளை அள்ளி விதைத்த போலி அதிகாரி கைது

திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையம் பகுதி பவானி நகர் 2வது வீதியில் கட்டடம் மேஸ்திரியாக பணியாற்றி வாடகை வீட்டில் வசித்து ஒரு ராசையா. இவர் சிபிஐ அதிகாரி எனப்படும் மத்திய குற்ற பலனாய்வுத் துறையில் இருப்பது போன்ற அடையாள அட்டை வைத்திருந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவர் சிபிஐ அதிகாரி என்ற போலி அடையாள அட்டை வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் இவர் பணத்தை பெற்றுக் கொண்ட பல்வேறு நபர்களுக்கு சிபிஐ போலி அடையாள அட்டைகளை வழங்கியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ராசாய்யாவை கைது செய்த திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு காவல் துறையினர் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 

Tags :

Share via

More stories