குடும்பப் பிரச்னைவயதான தாயை அடித்துக் கொன்ற மகன் கைது.

by Editor / 02-12-2022 08:55:16am
 குடும்பப் பிரச்னைவயதான தாயை அடித்துக் கொன்ற மகன் கைது.

கேரளாவின் கோட்டயத்தில் 80 வயது தாயை அடித்துக் கொன்ற வழக்கில் மகனை போலீசார் கைது செய்தனர். பனச்சிக்காடு பாத்தியப்பள்ளே கடவ் பகுதியை சேர்ந்த பிஜு (52) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிஜூவின் தாய் சதி (80) கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி கடந்த 23ஆம் தேதி உயிரிழந்தார். பிஜு மருத்துவமனையில், தனது தாய் விழுந்து காயமடைந்ததாக கூறினார். பின்னர் உடலை வீட்டிற்கு கொண்டு வந்தபோது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பிரேத பரிசோதனையில் சதியின் மார்பு மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டதே மரணத்திற்கு காரணம் என தெரியவந்தது. பின்னர் சிங்கவனம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். உறவினர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், கடந்த நவம்பர் 20ஆம் தேதி, மகன் பிஜு, தாயுடன் தகராறு செய்து, தாயை மார்பிலும், முகத்திலும் எட்டி உதைத்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார்.

முன்னதாக, பிஜுவுக்கும் அவரது சகோதரிக்கும் குடும்பப் பிரச்னை இருந்தது. பிஜு தனது சகோதரி தனது தாயை அவ்வப்போது பார்க்க வருவதை எதிர்த்து வந்துள்ளார். கடந்த 20ஆம் தேதி மதியம் தனது தாயாரை பார்க்க அவரது சகோதரி வந்ததாக பிஜு போலீசாரிடம் தெரிவித்தார். இதுவே கொலைக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர்.

 

Tags :

Share via