ஈரோடு எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா காலமானார்

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா(46) மாரடைப்பால் காலமானார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈ.வெ.ரா, மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் ஆவார். இதற்கு முன்பு 2015 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத் துறையின் தலைவராக இருந்துள்ளார்.கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது மறைவு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :