பெருந்துறையில் தனியார் நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.

by Staff / 06-01-2023 03:52:10pm
பெருந்துறையில் தனியார் நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.

பெருந்துறை செல்லாண்டியம்மன் திருக்கோவில் செயல் அலுவலர் சுரேஷ் கண்ணனுக்கு வந்த ஒரு முகவரி இல்லாத கடிதத்தில், பெருந்துறை பழைய பஸ் நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியா டெக்ஸ்டைல் நிறுவனத்திற்கு சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வைக்க உள்ளதாகவும், இதனால் அந்தப் பகுதியிலுள்ள அறநிலைய துறைக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வரும் மூன்று பெட்ரோல் பங்குகள் மற்றும் ஒரு தனியார் பள்ளி பாதிக்கும் என்பதால், சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள வாடகைதாரர்கள் உடனடியாக காலி செய்ய வேண்டும் எனவும், குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக செயல் அலுவலர் கண்ணன் பெருந்துறை போலீசில் புகார் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக, பெருந்துறை எஸ்ஐ செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து மிரட்டல் கடிதம் அனுப்பிய நபர் யார் என, விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

 

Tags :

Share via

More stories

Logo