காயத்ரி ரகுராம் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்ட விவகாரம் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

by Staff / 01-02-2023 01:52:31pm
 காயத்ரி ரகுராம் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்ட விவகாரம் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

தமிழக பாரதிய ஜனதா கட்சியில் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக காயத்ரி ரகுராம் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகக் கூறி, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாதம் நீக்கப்பட்டுவதாக அறிவித்திருந்தார். இதனையடுத்து, நடிகை காயத்ரி ரகுராம் அண்ணாமலை குறித்து கடுமையாக விமர்சனங்களை முன்வைத்ததோடு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதற்கு பிறகு பாஜக கட்சியை சேர்ந்த பலரும் காயத்ரி ரகுராமிற்கு எதிராக குரல் கொடுத்தும், பல்வேறு விமர்சனங்களை குறிக்கும் வந்த நிலையில் ராணிப்பேட்டையைச் சேர்ந்த பாபு என்ற பாஜக நிர்வாகி மற்றும் சில பாஜகவினர் தன்னை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் கருத்துக்களை பதிவிடுவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்ற பெயரிலும், பாஜக பிரமுகர் ஐடிவிங் என்ற பெயரிலும் எனது புகைப்படத்தை மார்ஃபிங் செய்து ஆபாசமாக அவதூறு கருத்துக்களை பரப்புவதாக அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் ராணிப்பேட்டை பாஜக பிரமுகர் பாபு உள்ளிட்ட பாஜகவினர் சிலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆபாசமாக சித்தரித்தல் மற்றும் மான பங்கபடுத்தல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் நடிகை காயத்ரி ரகுராம் பற்றி ஆபாசமாக பதிவிட்ட நபர்கள் பட்டியல் தயாரித்து அவர்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via