பெண் ஊழியருக்கு செல்போனில் ஆபாச டார்ச்சர்.துணை பி.டி.ஓ பணி இடைநீக்கம்.

by Staff / 21-02-2023 04:11:00pm
பெண் ஊழியருக்கு செல்போனில் ஆபாச டார்ச்சர்.துணை பி.டி.ஓ பணி இடைநீக்கம்.

செல்போன் மூலம் பெண் ஊழியரை டார்ச்சர் செய்த துணை பிடிஓ சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வேலூர் ஊராட்சிகள் உதவி இயக்குநர் (தணிக்கை) அலுவலகத்தில் துணை பிடிஓ லோகநாதன், நீண்ட நாட்களாக செல்போனில் சக பெண் ஊழியரை ஆபாசமாக பேசி டார்ச்சர் செய்து வந்துள்ளதாக தெரிகிறது.கடந்த வாரமும் அவரது தொல்லை அதிகரிக்கவே இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் அப்பெண் ஊழியர் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஆர்த்தி விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து, மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் (தணிக்கை) அலுவலக துணை பிடிஓ லோகநாதனை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

 

Tags :

Share via

More stories