கன்னியாகுமரியில் சத்ரபதி சிவாஜி சிலை உடைப்பு-போலீசார் குவிப்பு.
கன்னியாகுமரி மாவட்டம், குழிதரை அருகே தோட்டத்துமடம், நவநீதகிருஷ்ணன் கோவிலில், 15 ஆண்டுகளுக்கு முன்பு 9 அடி உயரமுள்ள,சத்ரபதி சிவாஜி சிலை வைக்கப்பட்டது..இச்சிலை, நேற்று (ஏப்.,9)ம் தேதி காலை, உடைக்கப்பட்டிருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்தனர். இது குறித்து, கன்னியாகுமரி எஸ்.பி., ஹரிகிரண்பிரசாத் கூறியதாவது:சிலையை உடைத்தவர்கள் விபரம் குறித்து, விசாரிக்கிறோம். இதற்காக, தனிப்படை அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. பதற்றத்தை தவிர்க்க, சம்பந்தப்பட்ட பகுதியை சுற்றிலும், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது,' என்றார்
Tags :