தமிழ் மீது இந்தியை திணிக்க முடியாது: ஆர்.என்.ரவி

by Staff / 13-04-2023 11:49:42am
தமிழ் மீது இந்தியை திணிக்க முடியாது: ஆர்.என்.ரவி

தமிழ் மீது இந்தி உள்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். ஆளுநர் மாளிகையில் பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்களிடையே உரையாற்றிய அவர், 'தமிழ் மொழி மீது இந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது. இந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது. சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமைவாய்ந்த மொழி. திருக்குறள் மனித சமூகத்திற்கு தேவையான அனைத்து கருத்துகளையும் வழங்கும் நூல்: திருக்குறளை ஆழமாக அனைவரும் பயில வேண்டும்' என்றார்.

 

Tags :

Share via

More stories