காட்டுப்பகுதியில் திடீர் தீ விபத்து…
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள ஆலடி அம்மன் கோவில் காட்டுப்பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமானது. மேலும் இரண்டு மூன்று இடங்களில் அடுத்தடுத்து தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :