கவர்னர் மாளிகையில் இப்தார் விருந்து: நாஜிம் எம். எல். ஏ. வலியுறுத்தல்

by Staff / 15-04-2023 12:50:47pm
கவர்னர் மாளிகையில் இப்தார் விருந்து: நாஜிம் எம். எல். ஏ. வலியுறுத்தல்

புதுவை கவர்னர் மாளிகையில் கடந்த காலங்களில் கவர்னர் சார்பில் ஆண்டு தோறும் இப்தார் விருந்து நடைபெறும்.புதுவை கவர்னராக கிரண்பேடி இருந்தபோது சைவ உணவுகளை இப்தார் விருந்தில் பரிமாறினர். அதன்பிறகு தமிழிசை பொறுப்பேற்ற பிறகு இப்தார் விருந்து நடைபெறவில்லை.இந்நிலையில் காரைக்கால் மாவட்ட தி. மு. க. அமைப்பாளர் நாஜிம் எம். எல். ஏ. கவர்னர் மாளிகையில் இப்தார் விருந்து நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுவை மாநிலத்தில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையிலும், இஸ்லாமிய மக்களை கவுரவிக்கும் வகையிலும் கவர்னர் மாளி கையில் பாரம்பரியமாக நடைபெற்று வந்த இப்தார் விருந்து நிறுத்தப்பட்டுள்ளது. கவர்னர் தமிழிசை இந்த ஆண்டு இப்தார் விருந்து நடத்தி மத நல்லிணக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories