சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வீரன் சுந்தரலிங்கனாரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
.jpeg)
வீரன் சுந்தரலிங்கனாரின் 253 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சுந்தரலிங்கனாரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சுதந்திரப் போராட்ட வீரன் சுந்தரலிங்கனாரின் 253 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆனி முத்துராஜ் தலைமையில் வடக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கலந்துகொண்டு வீரன் சுந்தரலிங்கனாரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து கணேஷ், பாண்டவர்மங்கலம் கிளை செயலாளர் சுப்பையா, துணைச் செயலாளர் மாதவராஜ், கிளை இளைஞரணி செயலாளர் அழகுராஜ்,தென்றல் நகர் கிளை செயலாளர் எம்பி சந்திரன், கருப்பசாமி, தெற்கு காலனி செயலாளர் ஜெகன், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு சுந்தரலிங்கனாரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்

Tags :