* விசிக, தலித் மக்களுக்கு எதிராகவுள்ளது என்கிற தோற்றத்தை உருவாக்க வேண்டுமென்பதோ...

by Admin / 20-04-2023 11:09:12am
 * விசிக, தலித் மக்களுக்கு எதிராகவுள்ளது என்கிற தோற்றத்தை உருவாக்க வேண்டுமென்பதோ...

 நேற்று முன்தினம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் சிதம்பரம் இளையபெருமாளின் நூற்றாண்டு நினைவு அரங்கம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர்அறிவிப்பு செய்துஇருந்தாா் .இதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர்  தொல் . திருமாவளவன்  முதலமைச்சரை  சந்தித்து  நன்றி தெரிவித்தார் .. பின்னர்  அவர் செய்தியாளர்களை சந்தித்தார்  செய்தியாளர்களின் உடைய சந்திப்பின் பொழுது வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர் கேள்வி எழுப்பிய பொழுது ஒரு செய்தியாளர் திமுக காரர்  போன்று  பேசுகிறீர்களே  என்று  கேட்ட  கேள்விக்கு  ஆவேசமடைந்த  திருமாவளவன்  இந்தக் கேள்வி உள்நோக்கத்தோடும் திமுகவோடு விடுதலை சிறுத்தை கட்சி கூட்டணியில் இருப்பதாலும் அதை உடைப்பதற்கான முயற்சியாக இந்த கேள்வி இருப்பதாக தெரிவித்ததோடு அது பற்றிய தன் கருத்துக்களை வெளியிட்டார் .இந்நிகழ்வு பெறும் பூதகரமாக உருவான நிலையில், இன்று தொல் திருமாவளவன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்

'.வேங்கை_வயல் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை விட, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் அதன் தலைமை மீதான #நம்பகத்_தனமையைச் சிதைக்க வேண்டுமென்பதே அந்த கேள்வியில் இழையோடும் உள்நோக்கமென புலப்படுகிறது. பாதிக்கப்பட்டோரின் பக்கம் நின்று, கூட்டணி கணக்குகளை முன்னிறுத்தாமல், நேர்மைத் திறத்தோடு போராடிக் கொண்டிருக்கிற ஒரு இயக்கத்தை மற்றும் அதன் தலைமையை, ஒரு குதர்க்கமான கேள்வியின் மூலம் சிறுமைப்படுத்தும் நோக்கமே அதில் வெளிப்படுகிறது. * திமுக - விசிக உறவில் விரிசலை ஏற்படுத்திட வேண்டுமென்பதோ; * விசிக'வின் தனித்துவத்தைக் கொச்சைப்படுத்துவதோ; * விசிக'வின் தலைமையைப் பலவீனப்படுத்த வேண்டுமென்பதோ; * விசிக, தலித் மக்களுக்கு எதிராகவுள்ளது என்கிற தோற்றத்தை உருவாக்க வேண்டுமென்பதோ; * திமுக, தலித்துகளுக்கு எதிராக உள்ளது என்று தெரிந்தும் விசிக மற்றும் அதன் தலைமை, திமுகவுக்கு ஆதரவாக அதனைப் பாதுகாக்கவே முயலுகின்றன என்கிற ஒரு பொய்யான கருத்துருவாக்கத்தைச் செயவதோ; அந்தக் கேள்வியின் அற்பமான உள்ளீடாக இருக்கலாம். ஆனால், அந்தக் கேள்வி பாதிக்கப்ட்ட வேங்கைவயல் மக்களின் மீதான கரிசனம் இல்லை என்பது மட்டும்தான் இதில் உணர வேண்டிய உண்மை நிலையாகும்.

 

 

 

Tags :

Share via