திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு

by Staff / 07-05-2023 12:34:32pm
திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு

திமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மெரினா கடற்கரையில் அமைந்துள்ள நினைவிடங்களில் முதலமைச்சருடன், அமைச்சர்கள் பொன்முடி, ரகுபதி, சேகர்பாபு, பெரியகருப்பன், டி.ஆர்.பாலு எம்.பி., திமுகவினர் பலர் மரியாதை செலுத்தினர். இந்த ஆட்சி வாக்களித்தவர்களுக்கு மட்டும் அல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான்; இரண்டு ஆண்டுகளாக இந்த ஆட்சிக்கு கொடுத்த ஒத்துழைப்பை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories