விஷ வண்டுகள் தாக்கி மூன்று பெண்கள் படுகாயம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள லட்சுமணன் குடியிருப்பு கிராமத்தில் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த சரோஜா தவமணி வளர்மதி ஆகிய பெண்கள் மீது திடீரென கூட்டமாக வந்த விஷ குழவிகள் தாக்கியது இதில் உடல் முழுவதும் வீக்கமாக காணப்பட்டு படுகாயம் அடைந்து பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட நபர்களை கடித்து தாக்கியதில் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர் தற்போது மூன்று பெண்மணிகளை தாக்கியதில் அரசு மருத்துவமனையில் கிராமத்தினர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் லட்சுமண குடியிருப்பு கிராமத்தில் புகுந்த குழவிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags :