கள்ளச்சாராயம் தயாரித்தல் அல்லது விற்பனை செய்தல் நடக்கிறதா என பறக்கும் காமிரா மூலம் கண்காணித்த போலீசார்.

by Editor / 28-06-2023 09:29:49pm
கள்ளச்சாராயம் தயாரித்தல் அல்லது விற்பனை செய்தல் நடக்கிறதா என பறக்கும் காமிரா மூலம் கண்காணித்த போலீசார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் உத்தரவின் பேரில் சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவிபட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா, கள்ளச்சாராயம் தயாரித்தல் அல்லது விற்பனை செய்தல் போன்ற செயல்கள் நடைபெறாத வண்ணம் சிவகிரி காவல்துறையினர் ட்ரோன் கேமரா உதவியுடன் வனப்பகுதியை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு இது தொடர்பான செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை தொடர்பு எண்ணில் 94875 45177 தெரிவிக்குமாறு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். கள்ளச்சாராயம் தயாரித்தல் அல்லது விற்பனை செய்தல் நடக்கிறதா என பறக்கும் காமிரா மூலம் கண்காணித்த போலீசார்.
 

Tags :

Share via

More stories