by Staff /
11-07-2023
01:31:06pm
அமலாக்கத்துறை கைதை தொடர்ந்து செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் உத்தரவை நிறுத்தி வைத்தார். இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரை தமிழக ஆளுநர் ரவி சந்தித்து பேசிவருகிறார். 7 நாள் பயணமாக டெல்லியில் முகாமிட்டுள்ள ஆளுநர் ரவிக்கு அமித்ஷா வழங்கிய ஆலோசனைப்படி, இந்த சந்திப்பு நடைபெறுவதாக கூறப்படுகிறது. அவரது ஆலோசனைக்கு பிறகு செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவை அவர் அறிவிப்பார் என கூறப்படுகிறது.<br />
Tags :
Share via