பெண் காவலர்களுக்கு சானிடரி நாப்கின் இயந்திரம் 

by Editor / 22-07-2021 07:06:54pm
பெண் காவலர்களுக்கு சானிடரி நாப்கின் இயந்திரம் 

 

பெண் காவலர்களின் நலன் கருதி இலவச சானிடரி நாப்கின் வினியோகிக்கும் இயந்திரங்களை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ரவளி ப்ரியா  துவக்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் பெண் காவலர்களின் நலன் கருதியும், பணியின் போது ஏற்படும் இடர்பாடுகளை நிவர்த்தி செய்யும் விதமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 41 காவல் நிலையங்கள் உள்ளடங்கும் வகையில் 27 காவல் நிலைய வளாகங்களில் தானியங்கி சானிடரி நாப்கின் வினியோகிக்கும் இயந்திரங்களை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ரவளி ப்ரியா துவக்கி வைத்தார். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் .லாவண்யா ஆகியோர்  உடன் இருந்தார்கள்.  
செ.சிவக்குமார்.  திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்

 

Tags :

Share via
Logo