தூத்துக்குடியில் பழிக்கு பலியாக லாரி செட் உரிமையாளர் வெடிகுண்டு வீசி படுகொலை. 

by Editor / 16-08-2023 11:30:07pm
தூத்துக்குடியில் பழிக்கு பலியாக லாரி செட் உரிமையாளர் வெடிகுண்டு வீசி படுகொலை. 

தூத்துக்குடியில் கடந்த ஜனவரி 28ஆம் தேதி கருப்பசாமி என்ற வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிக்கு பலியாக லாரி செட் உரிமையாளர் சக்திவேல் என்பவரை வெடிகுண்டு வீசி நான்கு பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓட்டம் பரபரப்பு

தூத்துக்குடி சங்கரப்பேரி பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்ற வாலிபர் கடந்த ஜனவரி 28ஆம் தேதி பத்துக்கும் மேற்பட்ட கும்பலால் வீட்டில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார் இந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் கருப்பசாமியின் ஆதரவாளர்கள் இன்று சங்கரப்பேரி சாலையில் அமைந்துள்ள சோழன் லாரி புக்கிங் ஆபீஸ் உரிமையாளர் சக்திவேல் என்பவர் அலுவலகம் வெளியே சேரில் அமர்ந்திருக்கும் போது அங்கு வந்த நான்கு மேற்பட்ட கும்பல் வெடிகுண்டு வீசி அவர் மீது தாக்குதல் நடத்தியதுடன் கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ளது 

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்,  நகர துணை கண்காணிப்பாளர் சத்யராஜ், ஊரக துணை கண்காணிப்பாளர் சுரேஷ், ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தூத்துக்குடியில் பழிக்கு பலியாக லாரி செட் உரிமையாளர் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

Tags : லாரி செட் உரிமையாளர் வெடிகுண்டு வீசி படுகொலை

Share via

More stories

Logo