உலகக்கோப்பை செஸ்.. தமிழக வீரரை உற்று நோக்கும் இந்தியா

by Staff / 23-08-2023 01:28:33pm
உலகக்கோப்பை செஸ்.. தமிழக வீரரை உற்று நோக்கும் இந்தியா

உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா - நார்வேயின் கார்ல்சனுடன் மோதினார். இரண்டு சுற்றுகளாக நடைபெறும் இறுதிப்போட்டியில், 35வது காய் நகர்த்தலுக்கு பிறகு நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் டிராவில் முடிந்தது. இன்று (ஆகஸ்ட் 23) இரண்டாவது சுற்று ஆட்டம் நடைபெறுகிறது. அதில் பிரக்யானந்தா கறுப்பு நிற காய்களுடன் விளையாட உள்ளார். இந்நிலையில், பிரக்ஞானந்தா வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்துடன் இந்தியா முழுவதும் மக்கள் காத்திருக்கிறார்கள். மேலும், பிரக்யானந்தாவிற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo