கோவில்பட்டியை குளிர்வித்த கன மழை -வாகன ஓட்டிகள் சிரமம்

by Editor / 02-09-2023 07:02:56am
கோவில்பட்டியை குளிர்வித்த கன மழை -வாகன ஓட்டிகள் சிரமம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. பகல் மட்டுமல்ல இரவிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தாலும் , வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இன்றும் காலை முதல் மாலை வரை வழக்கம்போல வெயிலின் தாக்கம் இருந்தது. அதன் பின்னர் லேசான சாரல் மழையுடன் மழை தொடங்கியது . நேரம் செல்லச் செல்ல சாரல் மழை பலத்த மழையாக பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியதுமேலும் இரு சூழ்ந்து காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் விளக்குகளை ஒளிர  விட்டபடி வாகனங்களை இயக்கினர். இன்று பெய்த பலத்த மழை காரணமாக இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரயில்வே சுரங்க பாலத்தில் மழை நீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் மழைநீர் புகுந்து பாதிப்புக்கு உள்ளாகின. மேலும் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. கோவில்பட்டி நகர் மட்டுமின்றி இனாம்மணியாச்சி, இலுப்பையூரணி மூப்பன்பட்டி , பாண்டவர்மங்கலம், திட்டங்குளம், நாலட்டின் புதூர் உள்ளிட்ட பகுதியிலும் பலத்த மழை பெய்தது.
 

 

Tags : கோவில்பட்டியை குளிர்வித்த கன மழை

Share via

More stories

Logo