நண்பர்களால் இளைஞர் கொலையா.

by Staff / 06-10-2023 03:58:34pm
நண்பர்களால் இளைஞர் கொலையா.

குமாரபாளையம் நாராயண நகர் பகுதியில் வசிப்பவர் கார்த்திகேயன், 38. எலெக்ட்ரிசியன். இவருடன் இவர் நண்பர்களான தனபால், அரை பச்சை ஆகிய மூவரும் சேர்ந்து மது குடிப்பது வழக்கம் என கூறப்படுகிறது. அக். 4ல் இரவு 09: 30 மணியளவில் மேற்படி மூவரும் பள்ளிபாளையம் சாலை தாலுக்கா அலுவலக பிரிவு சாலை பூக்கடை அருகே குடித்து விட்டு, தகறாறு  செய்து கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த கார்த்திகேயன் தம்பி சந்தோஷ்குமார், 30, மூவரையும் சமாதானப்படுத்தி அண்ணனை அழைத்துக்கொண்டு, மற்ற இருவரையும் அனுப்பி வைத்தார். அப்போது தனபால், அரை பச்சை இருவரும் இன்று இரவுக்குள் உன்னை கழுத்து அறுத்து கொள்ளாமல் விடமாட்டோம், என்று கூறி சென்றதாக தெரிகிறது. நேற்று அதிகாலை 03: 30 மணியளவில் மணிகண்டன் என்பவர் சந்தோஷ்குமார் வீட்டின் கதவை தட்ட, எழுந்து வந்த சந்தோஷ்குமாரிடம், கார்த்திகேயன் கழுத்து அறுபட்ட நிலையில் உள்ளார், என்று சொன்னார். நேரில் சென்று பார்த்த சந்தோஷ்குமார் இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இதன்படி வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் தலைமறைவான தனபால், அரை பச்சை ஆகிய இருவரை தேடி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

 

Tags :

Share via

More stories