குடோனில் குட்கா பதுக்கல்... ஒரு டன் குட்காவை பதுக்கி வைத்திருந்தவர் கைது...

by Admin / 27-07-2021 02:22:08pm
குடோனில் குட்கா பதுக்கல்... ஒரு டன் குட்காவை பதுக்கி வைத்திருந்தவர் கைது...



சென்னையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஒரு டன் குட்கா பொருட்களை குடோனில் பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

 எழும்பூர் பகுதிக்குட்பட்ட வீரபத்திரன் தெரு அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ள குடோனில் குட்கா பொருட்கள்  பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்று சோதனை மேற்கொண்ட போலீசார், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஒரு டன் எடை கொண்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
 
அதனைதொடர்ந்து குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக முருகவேல் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 
பின்னர் சென்னை மண்டல உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து குட்கா பதுக்கி வைத்திருந்த அறைக்கு சீல் வைத்தனர்.  

 

Tags :

Share via

More stories