செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா..? - திங்கள்கிழமை விசாரணை

by Staff / 28-10-2023 05:26:37pm
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா..? - திங்கள்கிழமை விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு உச்ச நீதிமன்றத்தில் திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது. நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா.எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு ஜாமின் மனுவை விசாரிக்கவுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜுன் மாதம் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்றக் காவலை நவம்பர் 6ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 9-வது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories