போர்க்கால நிவாரணப் பணிகள் பாராட்டத்தக்கவை: கி. வீரமணி

by Staff / 05-12-2023 04:39:14pm
போர்க்கால நிவாரணப் பணிகள் பாராட்டத்தக்கவை: கி. வீரமணி

சென்னையில் மழை பாதிப்பு: திராவிட மாடல் ஆட்சியின் போர்க்கால நிவாரணப் பணிகள் பாராட்டத்தக்கவை என திராவிட கழக தலைவர் கி. வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் காதில் கூறியதாவது, தமிழ்நாட்டை மிரட்டிய ‘மிக்ஜாம்‘ புயல் ஒருவழியாக இன்று (5. 12. 2023) அதிகாலை தமிழ்நாட்டைக் கடந்து, ஆந்திரா மாநிலம் மசூலிப்பட்டினம், பாபட்லா பகுதி அருகே கரையைக் கடந்து செல்லுவதால், தமிழ்நாட்டில் பெய்த அடைமழை – 47 ஆண்டுகளுக்குமுன்பு பெய்ததுபோல, அடாது பெய்த மழையை தமிழ்நாடு அரசும், பேரிடர் மேலாண்மைத் துறையும் மற்றும் வருவாய்த் துறை, காவல்துறை, மருத்துவத் துறை, ஊடக செய்தி தகவல் துறை போன்ற பல துறையினரும் நன்றாக ஒருங்கிணைந்து சமாளித்த விதம் மிகவும் பாராட்டத்தக்கதாகும். பொதுமக்களும் பெரிதும் நிலைமையைப் புரிந்துகொண்டு ஒத்துழைப்புக் கொடுத்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo