கேரளாவிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சான்று கட்டாயம்
கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு வரும் 5-ஆம் தேதி முதல் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ''வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையத்தில் 13 நிமிடங்களில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவை அறிவிக்கும் நடைமுறை ஓரிரு நாளில் அமலுக்கு வர உள்ளது. கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு வரும் 5-ஆம் தேதி முதல் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்படும். 2 தடுப்பூசி போட்டிருந்தால் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயமில்லை..வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். சர்வதேச விமான நிலையத்தில் அதிநவீன பரிசோதனை இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது'' என்று அவர் தெரிவித்தார்.
Tags :