சாந்தன் உடலுக்கு திருமாவளவன், சீமான் அஞ்சலி

by Staff / 28-02-2024 01:35:06pm
சாந்தன் உடலுக்கு திருமாவளவன், சீமான் அஞ்சலி

உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்த சாந்தனின் உடலுக்கு விசிக தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பிரேதப் பரிசோதனை உள்ளிட்ட முக்கிய நடைமுறைகள் முடிந்த நிலையில், அவரது தாய் நாடான இலங்கைக்கு இன்று விமானம் மூலம் அவரது உடலை அனுப்பி வைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த நிலையில், தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள் பலரும் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via