சேந்தமங்கலம் அருகே ரூ. 4 லட்சம் பறிமுதல்

by Staff / 18-03-2024 01:24:18pm
சேந்தமங்கலம் அருகே ரூ. 4 லட்சம் பறிமுதல்

தமிழகத்தில் ஏப். 19-இல் மக்களவைத் தோதல் நடைபெறுவது தொடா்பான அறிவிப்பு சனிக்கிழமை வெளியிடப்பட்டதையடுத்து, தோதல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. பறக்கும் படைக் குழு, நிலை கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழு என பல்வேறு குழுக்கள் மாவட்ட எல்லைகளில் ஆங்காங்கே வாகனச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன.நாமக்கல் மக்களவைத் தொகுதியில் சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்திவேலூா், ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 192 அலுவலா்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்த நிலையில், சென்னையில் இருந்து நாமக்கல் நோக்கி ஞாயிற்றுக்கிழமை காலை வந்த முட்டை ஏற்றிச் செல்லும் வாகனத்தை சேந்தமங்கலத்தை அடுத்த கல்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் பறக்கும் படை அலுவலா் எழிலரசு தலைமையிலான குழுவினா் நிறுத்தி சோதனை நடத்தினா்.அப்போது, உரிய ஆவணங்களின்றி வாகனத்தில் வைத்திருந்த ரூ. 4 லட்சத்தை பறிமுதல் செய்த அலுவலா்கள் வாகன ஓட்டுநரான திருச்சியைச் சோந்த சித்திரவேல் மகன் ராமராஜ் (42) என்பவரிடம் விசாரணை நடத்தினா். அதன்பிறகு பறிமுதல் செய்யப்பட்ட பணம் உதவி தோதல் அலுவலா் பிரபாகரனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆட்சியா் ச. உமாவின் உத்தரவின் பேரில் கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது

 

Tags :

Share via