ஜெயக்குமார் வழக்கு - காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி

by Staff / 01-04-2024 04:34:49pm
ஜெயக்குமார் வழக்கு - காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி

கடந்த 2022 இல் திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக ஜெயக்குமார் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார். ஆனால் இதில் நடவடிக்கை எடுக்காமல் வழக்கை முடித்து வைத்ததாக கூறி ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணையின்போது, ஜெயக்குமார் புகாரை காவல்துறை அறிக்கையை அடிப்படையாக வைத்து மட்டுமே ஏன் முடித்து வைக்கப்பட்டது? என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளை தள்ளிவைத்தனர்.

 

Tags :

Share via