கனிமொழி பிரச்சாரம் அனுமதியின்றி மேடை உயர் மின்விளக்குகள் அமைக்கும் பணி தடுத்து நிறுத்திய போலீசார்.

by Editor / 01-04-2024 10:46:30pm
கனிமொழி பிரச்சாரம் அனுமதியின்றி மேடை உயர் மின்விளக்குகள் அமைக்கும் பணி தடுத்து நிறுத்திய போலீசார்.

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக மருத்துவர் ராணி ஸ்ரீகுமார் போட்டியிடுகிறார். இரண்டாவது நாளாக இன்று தென்காசி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.அவரை ஆதரித்து 2 ஆம் தேதி அன்று மாலை 6 மணி அளவில் தென்காசி மேலரதவீதி, மற்றும் வடக்கு ரத வீதி இணையும் சந்திப்பு பகுதியில் திமுகவினுடைய துணைப் பொதுச் செயலாளரும் ,தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான கனிமொழி கருணாநிதி வாக்கு சேகரிக்க  வருகிறார், இதன் தொடர்ச்சியாக தென்காசியில் அனுமதியின்றி மேடை அமைக்கும் பணிகளும், உயர் மின் விளக்குகள் அமைக்கும் பணிகளும் மேலரத வீதியும்,வடக்கு வீதியும் இணைந்த சந்திப்பு பகுதியில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக காவல்துறையினருக்கு அந்த பகுதியினர் தகவல் தெரிவிக்க தென்காசி காவல்துறை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் போலீசார்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் விரைந்து வந்து அந்த இடத்தில் அனுமதியில்லாமல் மேடை அமைக்க கூடாது, மேலும் உயர் மின் விளக்குகள் அமைக்க கூடாது என்று தடுத்து நிறுத்தி அவர்கள் கொண்டுவந்த பொருட்களை உடனடியாக அகற்றி அந்த வாகனத்தில் மீண்டும் பொருட்களை திருப்பி  அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
 

 

Tags : கனிமொழி பிரச்சாரம் அனுமதியின்றி மேடை உயர் மின்விளக்குகள் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய போலீசார்.

Share via