கடற்கரை கிராமத்தில் 3449 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல்

by Staff / 17-04-2024 04:30:01pm
கடற்கரை கிராமத்தில் 3449 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல்

குமரியில் பாராளுமன்ற தேர்தல் 19-ம் தேதி நடைபெறுவதையொட்டி இன்று முதல் மதுக்கடைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் புதுக்கடை அருகே முள்ளூர்துறை கடற்கரை கிராமத்தில் உள்ள ஒரு ஐஸ் பிளாண்ட் குடோனில் மது பாட்டில் இருப்பதாக புதுக்கடை போலீசாடுக்கு வந்த தகவலைத் தொடர்ந்து புதுக்கடை இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில், எஸ் எஸ் ஐ செல்லத்துரை , தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ் ஆகியோர் உட்பட போலீசார் சோதனையிட்டனர்.அப்போது நாஞ்சில் சீ புட் என்ற கம்பெனி குடோனில் சென்று சோதனை செய்தனர்.அப்பொழுது அங்கு 3 ஆயிரத்து 449 மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் நான்கு மது கம்பெனிகளுக்கு சொந்தமான பாட்டில்கள் என கூறப்படுகிறது.இதையடுத்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்து புதுக்கடை போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டன.இதனுடைய மதிப்பு ஐந்து மேல் இருக்கும் என கூறினர். இது தொடர்பாக புதுக்கடை இன்ஸ்பெக்டர் முத்து அரயன் தோப்பு பகுதியை சேர்ந்த ஆன்டனி ஹென்ஸ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.ஒரே இடத்தில் இருந்து இவ்வளவு மதுபாட்டில்கள் பிடித்தது பரபரப்பாக பேசப்படுகிறது.

 

Tags :

Share via

More stories