சிறுமி கொலை வழக்கில் மே-2 ல் குற்றப்பத்திரிகை தாக்கல்.

by Editor / 30-04-2024 11:32:00am
சிறுமி கொலை வழக்கில் மே-2 ல் குற்றப்பத்திரிகை தாக்கல்.

சிறுமி கொலை வழக்கில் வியாழக்கிழமை (மே-2) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாக போலீசார் தகவல்

புதுச்சேரியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேர் சிறையில் உள்ள நிலையில் இவ்வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகள் சட்டத்துறைக்கு போலீசார் அனுப்பி வைத்திருந்த நிலையில் நேற்று மாலை குற்றப்பத்திரிகை தாக்கலுக்கான ஒப்புதல் வந்த உடன் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருந்தது. ஆனால் இன்று தான் சட்டத்துறையில் இருந்து ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் படி இன்று ஒப்புதல் கிடைத்தால் வியாழக்கிழமை (மே -2) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என போலீசார் தகவல்

 

Tags : சிறுமி கொலை வழக்கில் மே-2 ல் குற்றப்பத்திரிகை தாக்கல்.

Share via

More stories