அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்.. மிக்க மகிழ்ச்சி

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமின் பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது மிகுந்த உதவியாக இருக்கும் என மம்தா தெரிவித்துள்ளார். கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டதை வரவேற்று மேற்குவங்க முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
Tags :