ப்ளாஸ்டிக் தேசியக் கொடியை பயன்படுத்த  வேண்டாம் - உள்துறை அமைச்சகம் அறிவிப்பு 

by Editor / 09-08-2021 08:33:01pm
ப்ளாஸ்டிக் தேசியக் கொடியை பயன்படுத்த  வேண்டாம் - உள்துறை அமைச்சகம் அறிவிப்பு 


 

நாடு முழுவதும் ப்ளாஸ்டிக்கால் ஆன தேசியக்கொடிகள் பயன்பாட்டைத் தடுக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.


நாட்டில் தேசியக்கொடியில் உள்ள மூன்று வர்ணங்கள் தியாகம், பசுமை, அமைதி ஆகியவற்றினைப் பிரபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் இதனை வார்த்தைகளாக தான் பயன்படுத்துகிறோம். இதற்கான எந்தவித மரியாதையும் முறையாக கிடைப்பதில்லை என்பதை நாம் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாவில் காண்கிறோம். ஆம் நாம் எப்பொழுதும் தேசியக்கொடி மீதான அன்பினையும், மரியாதையும் கொண்டுள்ளோம் என மக்கள் நம்புகிறார்கள். ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 ஆம் தேதிகளில் தேசியக்கொடியினை தங்கள் சட்டையில் அணிந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

முன்பெல்லாம் வெறும் காகிதத்திலான தேசியக்கொடிகள் தான் அனைவவரின் சட்டைகளில் இருக்கும். ஆனால் தற்பொழுது பிளாஸ்டிக்கில் ஆன தேசியக்கொடிகளை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.குறிப்பாக பிளாஸ்கால் ஆன கொடிகளைப் பயன்படுத்தியப் பின்பு அதை எப்படி பாதுகாத்து வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. மேலும் குடியரசு மற்றும் சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்குப் பின்னர், சிறிய அளவிலான பிளாஸ்டிக் கொடிகள் தரையில் வீசி எறியப்படுகின்றன.

இது தேசியக் கொடியை அவமதிக்கும் செயல் எனவே, இது உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும் கோரிக்கை எழுந்து வந்தது. இதோடு பிளாஸ்டிக்கினால் ஆன பொருட்கள் மக்குவதற்கு காலதாமதம் எடுப்பதால் சுற்றுச்சூழலும் மாசடைகிறது. எனவே சுதந்திர தினம் தவிர அரசு விழாக்கள், விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் பிளாஸ்டிக் தேசியக் கொடிகள் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடந்த சில ஆண்டுகளாகவே தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் தான் மத்திய அரசு உள்துறை அமைச்சகம், அனைத்து மத்திய அமைச்சகங்கள், அரசுத் துறைகள், மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு பிளாஸ்டிக் தேசியக்கொடியினை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது

 

Tags :

Share via